Powered By Blogger

Friday, February 18, 2011

அட கிடுக்கிப் பிடியின போடும் நீயும் கில்லாடி




பல்லவி

ஆண் :
ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

ஆண்:
நீ வழுக்குற மெழுகுச் சாலை
அட பதுக்குற அழகுச் சோலை
அடி பந்திக்கு வந்த வேளை
நீ நெய் வாழை

பெண்:
நீ இடுப்புல கொத்துச் சாவி
என் மடிப்புல மொத்தம் ஜீவி
அட கிடுக்கிப் பிடியின போடும்
நீயும் கில்லாடி

ஆண்:
அல்லே துல்லே – ஏதோ
ஆகிப்புட்டேன் உன்னாலே
அல்லே துல்லே – ஆசை
முத்திப்போச்சு கண்ணாலே

பெண்:
அல்லே துல்லே – ஏதோ
ஆகிப்புட்டேன் உன்னாலே
அல்லே துல்லே – ஆசை
முத்திப்போச்சு கண்ணாலே

சரணம் - 1

ஆண் :
ஏய்..
முத்தமே – அது
குத்தமா?
உன் அனுமதி இன்றி தரலாமா?
ஆதை ஆடைகள் தாண்டியும் இடலாமா?

பெண் :
அனுமதி
கேட்கும் சாக்கில்
ஆடை தாண்டியும் பார்க்காதே
அட்டைப் பூச்சியாய் ஒட்டாதே!

ஆண் :
நீ வயசுக்கு வந்த கோடை
குளிர் மூட்டியேக் கொல்லும் வாடை
பசு நெய்யில வறுத்த சீடை
என்னை நெருங்கியே நொறுக்காதே!

ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

சரணம் - 2

ஆண் :
ஹேய்..
உப்பமோ? – உடல்
தெப்பமோ?
நான் நீந்தித்தான் குளித்திட வரலாமா?
கை ஏந்திட வைப்பது முறையாமோ!

பெண் :
கையேந்திக்
கேட்டாலும்
கன்னி மனசு கரையாது
கற்புக் கோட்டைத் தாண்டாது

ஆண் :
நீ வயசுக்கு வந்த கோடை
குளிர் மூட்டியேக் கொல்லும் வாடை
பசு நெய்யில வறுத்த சீடை
என்னை நெருங்கியே நொறுக்காதே!

ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

Friday, July 2, 2010


நாம்
இருவரும் வசித்த
தனிமை வெற்றிடங்களை
இட்டு நிரப்புகிறது
முத்தக் காற்று!

Wednesday, June 30, 2010

கடற்கரையின்
மணல் துகள்களுக்கிடையில்
சிதறிக் கிடக்கிறது
என் முத்தங்ளில் உதிர்ந்த
உன் முதல் சிணுங்கல்கள்.


------------------------


உன் உதட்டுச் சாயத்தில்
உதிர்ந்து விழுகிறது
நேற்றைய முத்தத்தின் ருசி..
உன் உதட்டுச் சுழிப்பில
உயிர்த்தெழுகிறது
முத்தத்தின் மொத்தப் பசி!


----------------------------------


என் சூரிய மண்டலமே
பனிக்காடாகி விடுகிறது..
உன் ஒற்றை முத்தத்தில்

Wednesday, May 19, 2010

கடவுளின் காதல் தேவதை

கடவுளுக்கு தினமும்
இலட்சக் கணக்கில்
குவிகின்றன
காதல் கடிதங்கள்
கோரிக்கைகளாய்..

நீ எழுதாத
ஒரு கடிதத்திற்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறான்
கடவுள்!
----

கோரிக்கைகளைக் கொட்டிக் கொட்டி
குப்பைக் கூடையாகிவிட்டது
கடவுளின் கருவறை..

நீ வந்து
புன்னகை சிந்து
புனிதமாகட்டும்!
- - - -

உன்னைப் பற்றி
யோசிப்பதே
தியானம்
கடவுளுக்கு!
- - - -
உன்னைப் பார்த்ததிலிருந்து
உன்பேர் சொல்லி
பூஜிக்கச் சொல்கிறான்
பூசாரிகளிடம் கடவுள்..

ஆனால்
யாருக்குமே புரியவில்லை
கடவுளின் மொழி!
- - - -


பூக்களால் அர்ச்சனை செய்பவர்களைவிட
பார்வையால் அர்ச்சனை செய்யும்
உன்னை ரொம்பப் பிடிக்கும்
கடவுளுக்கு!

------

கடவுளுக்கு தினமும்
இலட்சக் கணக்கில்
குவிகின்றன
காதல் கடிதங்கள்
கோரிக்கைகளாய்..

நீ எழுதாத
ஒரு கடிதத்திற்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறான்
கடவுள்!
----

கோரிக்கைகளைக் கொட்டிக் கொட்டி
குப்பைக் கூடையாகிவிட்டது
கடவுளின் கருவறை..

நீ வந்து
புன்னகை சிந்து
புனிதமாகட்டும்!
- - - -

உன்னைப் பற்றி
யோசிப்பதே
தியானம்
கடவுளுக்கு!
- - - -
உன்னைப் பார்த்ததிலிருந்து
உன்பேர் சொல்லி
பூஜிக்கச் சொல்கிறான்
பூசாரிகளிடம் கடவுள்..

ஆனால்
யாருக்குமே புரியவில்லை
கடவுளின் மொழி!
- - - -


பச்சைக் குழந்தைக்கு
நிலவைக் காட்டி
சோறு ஊட்டும்
தாயைப் போல..

காதலைக் காட்டி
முத்தம் ஊட்டுகிறாய்
நீயெனக்கு!

காதல் பசி கூடுகிறது!
----

பூக்களால் துடைப்பாயோ
உன் இதழை
இவ்வளவு மென்மையாக உள்ளது.

----