Powered By Blogger

Saturday, February 26, 2011

கடவுள் வசிக்கிறார் சொற்களில்



ஆலய அர்ச்சனையை விட
ஓதுவார்கள் ஓதும் பாடலை விட
ரெம்பப் பிடிக்கும் கடவுளுக்கு
குழந்தைகளின் மொழிகள்..!


நமக்கோ
குழந்தைகள் பேசினால்
குமட்டல்
குழந்தைகள் கிறுக்கினால்
எரிச்சல்
குழந்தைகள் துள்ளினால்
தும்மல்
குழந்தைகள் விளையாடினால்
விக்கல்..!

பெரியவர்களை குழந்தைகளாக்கும்
குழந்தைகளை - நாம்
குழந்தையாய் பார்ப்பதில்லை.


குழந்தைகளை விட
தொலைக்காட்சிப் பெட்டிகளோடு
நெறுக்கம் அதிகம்


அவர்கள்
உதடுகள் உச்சரிக்க பொழியும்
பூமழையில் நனைந்து
மோட்சம் பெற
விரும்புவதில்லை நாம்.


மழையென்றால் குடைபிடித்தே
பழக்கப்பட்டவர்கள் நாம் தானே!

Saturday, February 19, 2011

ஓசை யில்லா ஒற்றைக் கொலுசாய்





காலமே என்மேலு னக்குத் துளியும்
கருணை யில்லையா? - நான்
ஆளான செய்தி யின்னும் நீதான்
அறிய வில்லையா?

பருவம் போடும் கோலம் என்னை
பனியாய் கரைக்குது - ஒரு
உருவ மில்லா கனவு வந்து
உயிரைக் கிழிக்குது.

பெயரின் பின்னே பட்டப் படிப்பு
பெரிதாய் போட்டேனே - மணக்
கயிறு கழுத்தில் ஏறத் தானோ
காசு கேட்பதா?

உலக வாழ்வு எனக்கு மட்டும்
பொய்யாய் போவதா? - என்
இளமை யெல்லாம் எனக்கு இன்று
எதிரி யாவதா?

வட்ட நிலவு வந்து என்னை
வெட்டி விட்டதே! - என்
கட்ட ழகுமே னியினைக் காற்று
சுட்டு விட்டதே!

சொந்த பந்தம் கூடும் நேரம்
கேள்வி யாகிறேன் - ஏன்
வந்த திந்த கேள்வி யென்று
வானைக் கேட்கிறேன்.

எந்தன் கனவு சொல்லி சிலிர்க்க
ஒருவன் இல்லையே - ஏன்
ஏட்டில் சேராத கவிதை யாக
என்ன வாழ்க்கையோ?

வான வில்லும் என்னைப் போலே
வதங்கிப் புழுங்குதோ! - ஓ
வானம் கூட அதனால் தானோ
அழுது புலம்புதோ..!

ஓசை யில்லா ஒற்றைக் கொலுசாய்
ஒலியைத் தொலைக்கிறேன் - அட
மீசை வைத்த பெண்ணோ என்று
ஆணை நினைக்கிறேன்.

Friday, February 18, 2011

அட கிடுக்கிப் பிடியின போடும் நீயும் கில்லாடி




பல்லவி

ஆண் :
ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

ஆண்:
நீ வழுக்குற மெழுகுச் சாலை
அட பதுக்குற அழகுச் சோலை
அடி பந்திக்கு வந்த வேளை
நீ நெய் வாழை

பெண்:
நீ இடுப்புல கொத்துச் சாவி
என் மடிப்புல மொத்தம் ஜீவி
அட கிடுக்கிப் பிடியின போடும்
நீயும் கில்லாடி

ஆண்:
அல்லே துல்லே – ஏதோ
ஆகிப்புட்டேன் உன்னாலே
அல்லே துல்லே – ஆசை
முத்திப்போச்சு கண்ணாலே

பெண்:
அல்லே துல்லே – ஏதோ
ஆகிப்புட்டேன் உன்னாலே
அல்லே துல்லே – ஆசை
முத்திப்போச்சு கண்ணாலே

சரணம் - 1

ஆண் :
ஏய்..
முத்தமே – அது
குத்தமா?
உன் அனுமதி இன்றி தரலாமா?
ஆதை ஆடைகள் தாண்டியும் இடலாமா?

பெண் :
அனுமதி
கேட்கும் சாக்கில்
ஆடை தாண்டியும் பார்க்காதே
அட்டைப் பூச்சியாய் ஒட்டாதே!

ஆண் :
நீ வயசுக்கு வந்த கோடை
குளிர் மூட்டியேக் கொல்லும் வாடை
பசு நெய்யில வறுத்த சீடை
என்னை நெருங்கியே நொறுக்காதே!

ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!

சரணம் - 2

ஆண் :
ஹேய்..
உப்பமோ? – உடல்
தெப்பமோ?
நான் நீந்தித்தான் குளித்திட வரலாமா?
கை ஏந்திட வைப்பது முறையாமோ!

பெண் :
கையேந்திக்
கேட்டாலும்
கன்னி மனசு கரையாது
கற்புக் கோட்டைத் தாண்டாது

ஆண் :
நீ வயசுக்கு வந்த கோடை
குளிர் மூட்டியேக் கொல்லும் வாடை
பசு நெய்யில வறுத்த சீடை
என்னை நெருங்கியே நொறுக்காதே!

ஹேய்..
கள்ளி – நீ
கிள்ளி வச்ச மல்லி – தேன்
கொட்டி வச்ச அல்லி – தீ
மூட்டி வச்ச பூஅள்ளி!

பெண்:
ஹேய்..
கத்தி – ஓ
மீச முள்ளு குத்தி – அட
பத்திக் கிச்சு புத்தி – அதில்
பஸ்பம் ஆச்சு தீக்குச்சி!